மேலும் செய்திகள்
2ம் நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்
27-Nov-2024
ஓமலுார்: மேச்சேரி, மலையனுாரை சேர்ந்த மகேஸ்வரன் மனைவி அர்ச்-சனா, 23. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், 9 மாத கர்ப்பிணி அர்ச்சனாவுக்கு நேற்று வலி ஏற்பட்டு காலை, 10:00 மணிக்கு, ஓமலுார் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம், 10:45க்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் மூச்சுவிட முடியாமல் அர்ச்சனாவுக்கு சிரமம் ஏற்பட்டதோடு, வலிப்பும் ஏற்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே அர்ச்சனாவை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அர்ச்சனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவ துறை, ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Nov-2024