மாமியார் மாயம் மருமகள் புகார்
மாமியார் மாயம்மருமகள் புகார்வாழப்பாடி, நவ. 9-வாழப்பாடி, மன்னாயக்கன்பட்டி, மேற்கு காட்டை சேர்ந்தவர் சண்முகம், 61. அவரது மனைவி அஞ்சலம், 56. கடந்த, 4ல் அஞ்சலத்துக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சண்முகம், சேலம் அரசு மருத்துவமனையில் பார்க்க அழைத்துக்கொண்டு புறப்பட்டார். மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி வரை மொபட்டில் சென்றனர். அங்கு அஞ்சலத்தை, பஸ்சில் ஏற்றிவிட்டு, சண்முகம் மொபட்டில் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அஞ்சலத்தை காணவில்லை. பின் உறவினர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இதனால் அவரது மருமகள் சரண்யா, நேற்று அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார் தேடுகின்றனர்.