உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோனா கல்லுாரியில் உருவாக்கி விண்ணில் ஏவப்பட்ட மோட்டார்

சோனா கல்லுாரியில் உருவாக்கி விண்ணில் ஏவப்பட்ட மோட்டார்

சேலம், சேலம், சோனா கல்லுாரியில் உருவாக்கப் பட்ட, சோனா சிம்ப்ளக்ஸ் ஸ்டெப்பர் மோட்டார், கடந்த, 2ல், சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து செயற்கைக் கோளில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுகுறித்து, இஸ்ரோ முன்னாள் உறுப்பினர், சோனா ஸ்பீட் தலைவர் கண்ணன், சோனா கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் கூறியதாவது:இஸ்ரோ பணிக்கு பங்களிக்க, நாட்டின் எதிர்கால விண்வெளி முயற்சிகளை ஆதரிக்க அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இந்த வெற்றிகர ஒருங்கிணைப்பு, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவன ஆய்வகங்கள்,- குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்து, -உலகளாவிய விண்வெளி ஆய்வின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சோனா ஸ்பீட்டின் பங்களிப்பு, இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, உயர் துல்லிய விண்வெளி பொறியியலில் உள்நாட்டில் வளர்க்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு கலங்கரை விளக்கமாகவும் செயல்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !