அரசு பள்ளி ஏழை மாணவர்களை டில்லி அழைத்துச்சென்ற எம்.பி.,
மேட்டூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன். மேட்-டூரை சேர்ந்த இவர், மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 9 ஏழை மாணவர்களை தேர்வு செய்தார். தொடர்ந்து அவர்களை, அப்பள்ளியை சேர்ந்த, 3 ஆசிரியர்க-ளுடன் கடந்த, 17ல், கோவையில் இருந்து நேரடியாக டில்லி விமானத்தில், அவரது சொந்த செலவில் அழைத்துச் சென்றார். அங்கு பழைய பார்லி மென்ட் கட்டடம், புது கட்டடம், செங்-கோட்டை, குதுப்மினார் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிக்-காட்டினார். பின் நேற்று முன்தினம் இரவு, விமானம் மூலம் மேட்டூர் அழைத்து வந்தார்.முதல்முறை டில்லிக்கு சுற்றுலாவாக அழைத்து சென்றதால், எம்.பி., சந்திரசேகரனுக்கு, மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.