உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முள்ளுவாடி கேட் மேம்பால பணி 17 முதல் போக்குவரத்தில் மாற்றம்

முள்ளுவாடி கேட் மேம்பால பணி 17 முதல் போக்குவரத்தில் மாற்றம்

சேலம்:சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில், ரயில்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, செரி ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அஸ்தம்பட்டியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், அந்த வழியே செல்கின்றன.இந்நிலையில் மற்றொரு கேட் பகுதி உள்ள பிரட்ஸ் சாலையில், 72 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வரும், 17 முதல், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவள்ளுவர் சிலை, பிரட்ஸ் சாலை வழியே செல்லும் வாகனங்கள், வள்ளுவர் சிலையில் இருந்து சுகவனேஸ்வரர் கோவில் வழியே முள்ளுவாடி கேட் மேம்பாலத்தில் சென்று, தொங்கும் பூங்கா செல்ல வேண்டும்.அதேபோல் தொங்கும் பூங்காவில் இருந்து பிரட்ஸ் சாலை வழியே கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள், முள்ளுவாடி கேட் செரி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் சென்று, சுகவனேஸ்வரர் கோவில் வழியே வள்ளுவர் சிலை சாலையில் செல்ல வேண்டும். இந்த மாற்றத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி