சங்ககிரி மலைக்கோட்டையில் மர்ம விலங்கு? வாட்ஸ் ஆப் தகவலால் வனத்துறை ஆய்வு
சங்ககிரி மலைக்கோட்டையில் மர்ம விலங்கு?'வாட்ஸ் ஆப்' தகவலால் வனத்துறை ஆய்வுசங்ககிரி, நவ. 16-சங்ககிரி மலைக்கோட்டையில், மர்ம விலங்கின் காலடி தடம் இருப்பதாக, 'வாட்ஸ் ஆப்' தகவலால் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை பின்புறம் உள்ள கலியனுாரில் இருந்து ராயலுார் செல்லும் வழியில் உள்ள செட்டியார்காட்டில் மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகி உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, அப்பகுதியில் உள்ளவர்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் தகவல் பரவியது.இதனால் நேற்று, சேலம் சேர்வராயன் மலைப்பகுதி வனக்காப்பாளர் முத்துராஜா, சங்ககிரி வருவாய்த்துறை ஆய்வாளர் மலர்விழி உள்ளிட்டோர், சங்ககிரி மலைப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து முத்துராஜா கூறுகையில், ''மழையால் காலடி தடம் எதுவும் இல்லை. இருப்பினும் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்ய உள்ளோம்,'' என்றார்.