உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேசிய கடிதப்போட்டி: டிச., 8 வரை எழுதலாம்

தேசிய கடிதப்போட்டி: டிச., 8 வரை எழுதலாம்

சேலம்: இந்திய அஞ்சல்துறை சார்பில், கடந்த செப்., 8ல் தொடங்கிய தேசிய அளவில் கடிதப்போட்டி, டிச., 8 வரை நடக்கிறது. இப்போட்டிக்கான தலைப்பு, 'என் முன்மாதிரிக்கு கடிதம்' என்பதாகும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய ஏதோ ஒரு மொழியில் கடிதம் எழுத வேண்டும். 'முதன்மை அஞ்சல்துறை தலைவர், தமிழ்நாடு, சென்னை - 600 002' என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்ப வேண்டும். அதன் உறை மீது, 'அஞ்சல்துறை கடிதப்போட்டி' என தவறாமல் குறிப்பிட வேண்டும். 18 வயது வரை, 18 வயதுக்கு மேல் என, தனித்தனியே போட்டி நடக்கிறது. 'என்வலப்' பிரிவில் எழுதுவோர், 'ஏ4' வெள்ளைத்தாளில், 1,000 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும். 'இன்லாண்டு லெட்டர்' பிரிவில் எழுதுவோர் 500 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதம் மட்டும் ஏற்கப்படும்.தமிழக அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு, 25,000 ரூபாய்; 10,000; 5,000 ரூபாய் முறையே பரிசு வழங்கப்படும். அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு, 50,000 ரூபாய்; 25,000; 10,000 ரூபாய் வழங்கப்படும். தமிழக அளவில் முதல் மூன்று பரிசு பெறும் கடிதங்களின் விபரம் வரும் ஜன., 23ல் அறிவிக்கப்படும் என, சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை