உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உறவினர் வீட்டுக்கு தீ வைத்தவருக்கு வலை

உறவினர் வீட்டுக்கு தீ வைத்தவருக்கு வலை

உறவினர் வீட்டுக்கு தீவைத்தவருக்கு வலைசேலம், டிச. 27-சேலம், குகை, நெய்மண்டி அருணாசலம் தெருவை சேர்ந்தவர் ராஜா, 55. இவர் மனைவி லட்சுமி, 50, மகன் பூபாலனுடன் வசிக்கிறார். லட்சுமியின் அண்ணன் செல்வராஜ் மகன் மணிகண்டன், 30. இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் உள்ளது. இரு நாட்களுக்கு முன், பாட்டி வீட்டுக்கு சென்ற பூபாலனிடம், மணிகண்டன் தகராறு செய்துள்ளார். மக்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, லட்சுமி வீட்டுக்கு வந்த மணிகண்டன், கேனில் வைத்திருந்த பெட்ரோலை, வீட்டு கதவில் ஊற்றி தீ வைத்து விட்டு பைக்கில் தப்பினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து லட்சுமி புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மணிகண்டன் தீ வைப்பது பதிவாகியிருந்தது. இதனால் அவரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை