நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பவள விழாவில் நுால் வெளியீடு
சேலம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின், 75ம் ஆண்டு பவள விழாவின் தொடக்க விழா, சேலம் செரி ரோட்டில் உள்ள அதன் அலுவலக அரங்கில் நடந்தது. முனைவர் சிலம்பரசன் வரவேற்றார். மோகன் முன்னிலை வகித்தார். அதில், 5 புது நுால்கள் வெளியிடப்பட்டன. நுால்களை, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் காந்திமதி, சேலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் செண்பகலெட்சுமி, முனைவர் முருகேசன், பத்மவாணி மகளிர் கல்லுாரி தமிழ் துறைத்தலைவர் பழனியம்மாள் வெளியிட்டனர். நுால்களை அறிமுகப்படுத்தி, முனைவர் சுந்தரமூர்த்தி, ஜெகன் பேசினர்.இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தேசிய சமூக இலக்கிய பேரவை மாநில தலைவர் தாரை அ.குமரவேலு பேசுகையில், ''74 - ஆண்டுக்கு முன், ஜூன், 1ல், இந்த புத்தக நிறுவனம் மதுரையில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள், எல்லா பாடங்களையும் தாய்மொழி தமிழில் கற்பிக்க வேண்டும் என்பதே,'' என்றார்.கவிஞர் ரவீந்திர பாரதி, எழுத்தாளர்கள் வின்சென்ட், மோகன்குமார், மணிகண்டன், 100க்கும் மேற்பட்ட நுால் ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, மேலாளர் ஒருங்கிணைத்தார். மண்டல மேலாளர் முரளிதரன் நன்றி தெரிவித்தார்.