மேலும் செய்திகள்
11 பவுன் நகைகள் ரூ.53,000 திருட்டு
02-Aug-2025
ஆடு திருடியவர் கைது
11-Aug-2025
சேலம், சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்தவர் சோமன்ராஜ், 53. எஸ்.எஸ்.ஐ.,யான இவர், மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர், 'காலிங் பெல்' அடித்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது யாரும் இல்லை. சந்தேகம் அடைந்த சோமன்ராஜ், சிறிது நேரம் வெளியே நின்று பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றார். இந்நிலையில் டேபிளில் இருந்த, 2 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து சோமன்ராஜ் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.3 பவுன் திருட்டுபனமரத்துப்பட்டி, திப்பம்பட்டியை சேர்ந்த விவசாய தொழிலாளி முத்து, 53. நேற்று முன்தினம் இரவு அரளி பறிக்க சென்றார். நேற்று காலை வந்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த, 3 பவுன் நகையை காணவில்லை. அவர் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Aug-2025
11-Aug-2025