மேலும் செய்திகள்
'ஆப்பரேஷன் சிந்துார்' பா.ஜ., பேரணி
30-May-2025
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி சுப்ரமணியர் கோவில் அருகே நுாலகம் செயல்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வாசகர்கள், தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் அமர்ந்து படிக்க போதிய இடவசதி இல்லாததால், தமிழக அரசு நுாலக நிதியில் இருந்து, 22 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிதாக நுாலகம் கட்டப்பட்டது. நேற்று காலை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம், நுாலகத்தை திறந்து வைத்தார். நுாலகத்தில் மகுடஞ்சாவடி ஊராட்சி முன்னாள் தலைவி மேகலா, ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
30-May-2025