உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குப்பை கழிவை அகற்ற புது திட்டத்துக்கு உத்தரவு

குப்பை கழிவை அகற்ற புது திட்டத்துக்கு உத்தரவு

ஏற்காடு: ஏற்காட்டில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை, கூடுதல் தலைமை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையம், ஒன்றிய நர்சரி, அம்மா ஜிம், அண்ணா பூங்கா, சரபங்கா குடில், ஏற்காடு இல்ல கட்டடங்களை பார்வையிட்டார். ஒன்றிய அலுவலகத்தில் குப்பை மறுசுழற்சி மையத்தை சீர்செய்வது குறித்து, அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். குப்பை கழிவை அப்புறப்படுத்த, புது திட்டம் தயாரித்து கொடுக்க உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் பொன்மணி, ஒன்றிய கமிஷனர் சிவகுமார், பி.டி.ஓ., முருகன் உடனிருந்தனர்.இதனிடையே பேடியிடம், அ.தி.மு.க.,வின், ஏற்காடு தொகுதி, எம்.எல்.ஏ., சித்ரா சந்தித்து, மனு கொடுத்தார். அதில், 'கரடியூர் முதல் சொரக்காப்பட்டி வரையான சாலையை விரைவில் அமைத்து கொடுக்க வேண்டும். வெள்ளக்கடையில் அங்கன்வாடி கட்டடம் தேவை. ஏற்காடு மக்களுக்கு குடிநீர், சாலை, உயர்மின் கோபுரங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்' என கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை