உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

கொடிக்காத்த குமரனுக்கு பா.ஜ.,வினர் மரியாதைசேலம் : கொடிக்காத்த திருப்பூர் குமரனின், 121வது பிறந்தநாளையொட்டி, சேலம், 5 ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு, சேலம் பா.ஜ., அழகாபுரம் மண்டல் சார்பில், தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழாஆத்துார் : ஆத்துார் அருகே அரசநத்தம் ஊராட்சி கந்தசாமிபுதுாரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி ேஷக விழாவுக்கு, கடந்த செப்., 25ல் முகூர்த்தக்கால் நடுதல், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் யாகம் நடந்து வந்த நிலையில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. கோபுர கலசங்கள் மீது பட்டாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.2 ஆண்டுக்கு முன் கணவர் மாயம்; மனைவி நேற்று புகார்ஆத்துார் : ஆத்துார் அருகே புங்கவாடியை சேர்ந்தவர் கண்ணன், 81. கிராம உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 2022 அக்., 31ல் ஓய்வூதியம் வாங்க, மஞ்சினியில் உள்ள வங்கிக்கு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி பழனியம்மாள், எங்கு தேடியும் கண்ணனை காணவில்லை. இதனால் அவர் நேற்று, ஆத்துார் ஊரக போலீசில் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடுகின்றனர்.கொலை குற்றவாளி கர்நாடகாவில் கைதுகாரிப்பட்டி: வாழப்பாடி, ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பாயி, 35. இவர், 2015ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய, புழுதிக்குட்டையை சேர்ந்த மாதேஷ், 43, கடந்த, 2023 முதல், சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். இந்நிலையில் அவர் கர்நாடகாவில் இருப்பதாக தகவல் கிடைக்க, அம்மாபேட்டை உதவி கமிஷனர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார், கர்நாடகா சென்றனர். நேற்று அங்குள்ள திப்பூரில் மாதேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின் சேலம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவுசேலம் : சேலம், குகை, ஆண்டிப்பட்டி ஏரி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 33. வெல்டிங் தொழிலாளியான இவர், கோட்டை, அண்ணா நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 3ம் மாடியில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 15 அடி நீள இரும்பு கம்பியை, மாடிக்கு கொண்டு செல்ல படிக்கட்டில் ஏறிய போது அந்த வழியே சென்ற மின் கம்பி யில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்ட அவர் உயிரிழந்தார். சேலம் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை