இரவில் பஸ் சேவை மீண்டும் தேவை
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையில் இருந்து, இடைப்பாடி செல்லும் சாலையில் தப்பக்குட்டை, ஐயனுார், தாடிக்காரனுார், அ.புதுார், ஒண்டிப்-பனை, கன்னந்தேரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பஸ் ஸ்டாப்-புகள் உள்ளன.அந்த தடத்தில், 5 எண் கொண்ட பஸ், தினமும் இளம்பிள்ளை - இடைப்பாடி இடையே, 4 முறை, '5பி' எண் கொண்ட பஸ், 3 முறை இயக்கப்பட்டன.இதில், 2021 கொரோனா காலத்தில், இரவு நேர பஸ் சேவை மட்டும் நிறுத்தப்பட்டு இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் வேலை சென்று வீடு திரும்பும் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இரவில் மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.