மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
13-Nov-2024
வீரபாண்டி, டிச. 12--வீரபாண்டி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை செயலர் அனிதா தலைமையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் அனிதா பேசுகையில், ''காலமுறை ஊதியம் தேவை. காலி பணியிடங்களில், 50 சதவீத இடங்களை போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப குழந்தைகளுக்கு உணவூட்டு செலவை உயர்த்தி வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரே செய்ய உத்தரவிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல் சத்துணவு பெண் ஊழியர்களுக்கும், 12 மாத பேறுகால விடுமுறை அளிக்க வேண்டும்,'' என்றார்.வீரபாண்டி ஒன்றிய தலைவர் சந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வி, மாதவி உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.ஓமலூரிலும்...தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், ஓமலுார் பி.டி.ஓ., வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓமலுார் ஒன்றிய தலைவி கவுரி தலைமை வகித்தார். அதில் காலி பணியிடங்களில், 3,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு, 6,750 ரூபாய் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினர். மாவட்ட செயலர் தங்கமணி, ஒன்றிய செயலர் கண்ணகி, பொருளாளர் பெருமாயி உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Nov-2024