உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

ஓமலுார்: புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை, அமைச்சர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே, தனியார் கட்ட-டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, காடையாம்பட்டி சார் பதி-வாளர் அலுவலகத்தை, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின் அலுவலகத்தில் நடந்த விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். புதிய அலுவலகத்தை அமைச்சர் பார்வையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து பத்திரப்பதிவு துவங்கியது. சேலம் துணைப்பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, மாவட்ட பதி-வாளர் கனகராஜ், காடையாம்பட்டி சார் பதிவாளர் பாஸ்கர், காடையாம்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், பேரூர் செயலர் பிரபாகரன், காடையாம்பட்டி டவுன் பஞ்., துணைத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்-றனர். விழாவுக்கு வந்த அமைச்சரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ