தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம்
சேலம் :தமிழக அரசின் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக, ஆட்சி மொழி கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.சேலம் மண்டல துணை இயக்குனர் பாரதி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தேசிய சமூக இலக்கிய பேரவை மாநில தலைவர் தாரை.குமரவேலு தமிழ் மொழியின் தொன்மை குறித்தும், அதன் பங்கு குறித்தும் பேசினார்.கருத்தரங்கில் காமராஜ், தமிழ்த்துறை பேராசிரியர் ராகவ.அச்சுதன், செவ்வேள் ஆகியோர் கருத்துரையாற்றினர். முனைவர் கணேசன் நிகழ்வை நெறிப்படுத்தினார். அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் முத்து மாரய்யன், இளந்திரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.