உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவிலை திறக்க 1 நாள் தாமதமாக வந்த அதிகாரிகள்; முற்றுகையிட்டு மக்கள் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு

கோவிலை திறக்க 1 நாள் தாமதமாக வந்த அதிகாரிகள்; முற்றுகையிட்டு மக்கள் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு

சேலம்: ஜான்சன்பேட்டையில், 10 ஆண்டாக பூட்டியிருந்த கோவிலை திறக்க, நீதிமன்ற உத்தரவுப்படி வராமல், ஒரு நாள் தாமதமாக வந்த அதிகாரிகளை, மக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சேலம், ஜான்சன்பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. இக்கோவில் உரிமை, விழா நடத்துவது குறித்து இரு தரப்பினர் இடையே, 2016 முதல், பிரச்னை உள்ளது. இதனால், 10 ஆண்டாக கோவில் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ், நடப்பாண்டு திருவிழா நடத்த, சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிப்., 26 முதல் மார்ச், 1 வரை கோவிலை திறக்க, அனுமதி அளித்தது. நேற்று கோவிலை திறக்க, வருவாய், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, முக்கிய நாளான, 26 அன்று சிவராத்திரியில் திறக்காமல், நீதிமன்ற அவமதிப்பு செய்ததால், கோவிலை திறக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர். இருப்பினும், அங்கு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ