உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகர் சிலை வைக்க சான்று பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்

விநாயகர் சிலை வைக்க சான்று பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்

சங்ககிரி ;சங்ககிரி வருவாய் கோட்டத்தில் உள்ள சங்ககிரி, இடைப்பாடி தாலுகாக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்பவர்களுக்கு ஆலோசனை கூட்டம், சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமை வகித்து பேசியதாவது:சிலை வைக்கும் இடத்திற்கான நிலம், தனியார் நிலமெனில் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளிடம், ஆட்சேபனையில்லா சான்று பெற வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான சான்று, தீயணைப்பு துறையிடம் பாதுகாப்பு சான்றிதழ், மின்வாரியத்தில் தற்காலிக மின் இணைப்பு பெறப்பட்டதற்கான ஆவணங்களுடன் இணைத்து, வரும், 25க்குள் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, இடைப்பாடியை சேர்ந்த தங்கராஜ் பேசுகையில், ''சிலை வைக்க தீயணைப்பு, மின்சாரத்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். அதனால் போலீசாரிடம் மனு மட்டும் கொடுக்கிறோம். மற்ற துறை அலுவலர்களிடம் சான்றுகளை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்,'' என்றார். இதற்கு ஆர்.டி.ஓ., 'யாரும் பணம் கேட்கமாட்டார்கள். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் சான்று பெற்று வாருங்கள்' என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ