உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் - லாரி மோதல் மூதாட்டி உயிரிழப்பு

மொபட் - லாரி மோதல் மூதாட்டி உயிரிழப்பு

ஆத்துார்: ஆத்துார் அருகே தென்னங்குடிபாளையம், வடக்குகாட்டை சேர்ந்த விவசாயி சீனிவாசன், 70. இவரது மனைவி காந்தியம்மாள், 65. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, ஆத்துாருக்கு, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். உடையார்பாளையத்தில் சென்றபோது, சேலத்தில் இருந்து அரியலுார் நோக்கி சென்ற லாரி, மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீனிவாசன், காந்தியம்மாள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு காந்தியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து ஆத்துார் டவுன் போலீசார், அரியலுார், செந்துறையைச் சேர்ந்த, லாரி டிரைவர் ஆனந்தராஜ், 30, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை