மூதாட்டியை தாக்கி தோடு, மூக்குத்தி பறிப்பு
சங்ககிரி: சங்ககிரி, வைகுந்தம், வாழக்குட்டையை சேர்ந்த விவசாயி ராஜீ. இவரது மனைவி பெருமாயி, 60. இவர் நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, அருகே உள்ள ஒரு-வரது வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் திரும்பி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி-ருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் தோடு, மூக்குதியை பறித்து சென்றார். இதில் காயம் அடைந்த பெருமாயி, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி, சங்ககிரி போலீசார், அருகே உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சி-களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.