மூதாட்டி கொலை; தனிப்படை விசாரணை
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கோவிந்தகவுண்டனுாரில் தனியே வசித்தவர் குமரி, 60. இவர் நேற்று முன்தினம் வீட்டில் முகம் சிதைத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். சம்பவ இடத்தில் எஸ்.பி., கவுதம் கோயல் விசாரித்தார்.தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், சம்பவ இடத்தை சுற்றியுள்ள கிராமம், மாவட்ட எல்லைப்பகுதியில் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.