மேலும் செய்திகள்
8 மணி நேர சோதனையில் 3 ஆம்னி பஸ் பறிமுதல்
15-Sep-2024
பைக் மீது ஆம்னி பஸ் மோதல்சக்கரத்தில் சிக்கி ஜோதிடர் பலிஆத்துார், செப். 29-ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி ராசி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 55. இவர், மனைவியை கொலை செய்த வழக்கில் இரட்டை ஆயுள் பெற்று, இரு ஆண்டுக்கு முன் தான் வெளியே வந்தார். பின் ஜோதிடம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 'விக்டர்' பைக்கில், கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப் வழியே சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னையில் இருந்து, சேலம் நோக்கி வந்த, 'வி.கே., டிராவல்ஸ்' ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் கோவிந்தராஜன், பஸ் சக்கரத்தில் பைக்குடன் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், ஆம்னி பஸ்சை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.
15-Sep-2024