வாகனம் மோதி ஒருவர் பலி
சங்ககிரி, தேவூர், கத்தேரியை சேர்ந்தவர் மாதேஸ், 38. திருமணமாகாதவர். நேற்று முன்தினம் காலை துாக்கத்தில் இருந்து எழுந்த மாதேஸ், வீட்டிலிருந்து அருகில் உள்ள பகுதிக்கு டீ கடைக்கு சென்றுள்ளார். காலை, 5:30 மணிக்கு கத்தேரி தேசிய நெடுஞ்சாலை பிரிவில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.