விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு 3ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கல்
சேலம், ஜன. 3-தமிழகத்தில் ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள், 3 ஆக பிரிக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் மாவட்டத்தில், 1,487 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அவர்களுக்கு, 2ம் பருவ தேர்வு, டிச., 23 வரை நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது. நேற்று விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டன. 3ம் பருவத்தின் முதல் நாளில், அவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடப்புத்தகம், 3ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 1.20 லட்சம் மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டி புத்தகங்களும், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.