ராஜகணபதி கோவிலில் வசந்த மண்டபம் திறப்பு
சேலம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சேலம், தேர்வீதி ராஜகணபதி கோவில் அருகே, வசந்த மண்டபம், வாகன பூஜை மண்டப திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவரான, சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, மண்டபங்களை திறந்து வைத்தார்.அதில் தலைவர் வள்ளியப்பா பேசுகையில், ''என்றும் இறைபணியில் இணைந்திருக்கும் எங்கள் சோனா கல்வி நிறுவனத்தால், பக்தர்கள் வசதிக்கு கட்டப்பட்டுள்ள இந்த வசந்த மண்டபம், வாகன பூஜை மண்டபத்தை, மக்கள் பயன்பாட்டுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.இதில் அரசு அதிகாரிகள், அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள், சோனா கல்வி நிறுவன துணைத்தலைவர் தியாகு, பக்தர்கள் பங்கேற்றனர்.