கல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி ஆப்பரேட்டர் சாவு
சேலம், வனவாசி அருகே மூலக்காடு சாணார்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 48. இவர் சேலம், எருமாபாளையத்தில் உள்ள ராஜகணபதி மெட்டல் கிரஷரில், மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று பணியில் ஈடுபட்டபோது, கல் அரைக்கும் மிஷினில், கால், கைகள் மாட்டி நசுங்கின. வலி தாங்க முடியாமல் துடித்த கோவிந்தசாமி சத்தம் கேட்டு, சக பணியாளர்கள், மிஷினை நிறுத்தி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.