உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மறுவாழ்வு இல்லங்களை பதிவு செய்ய உத்தரவு

மறுவாழ்வு இல்லங்களை பதிவு செய்ய உத்தரவு

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்ட அறிக்கை:சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்-றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இல்லங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் இல்லங்-களை, இணையதளம் அல்லது அலுவலகம் மூலமாக, ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், இல்-லங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை