மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
28-Mar-2025
பனமரத்துப்பட்டி:சேலம் மாவட்டத்தில், 'இல்லம் தேடி கல்வி'யில், 'நம்ம ஊரு கதை' தலைப்பில் மாணவர்களின் படைத்தல் திறனை மேம்படுத்த போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், 21 ஒன்றியங்களில் இருந்து, 44 சிறந்த கதைகள் தேர்வு செய்யப்பட்டன.முன்னதாக பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 204 கதைகள் போட்டியில் பங்கேற்க, வட்டார வள மையத்திற்கு வந்திருந்தன. அதில், 11 கதைகளை தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தன்னார்வலர் நித்யா, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி தன்னார்வலர் ரம்யா, பெரமனுார் அரசு தொடக்கப்பள்ளி தன்னார்வலர் சிவரஞ்சனி ஆகியோர், மாவட்ட அளவில் பரிசுகளை பெற்றனர். நேற்று முன்தினம் பனமரத்துப்பட்டி வட்டார வள மையத்தில் தன்னார்வலர்கள், மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஊக்குவித்த அப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களையும் பாராட்டினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்ராஜா, கல்வி அலுவலர் கிரிஜா, ஆசிரிய பயிற்றுனர் பால், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நறுக்குன்னு ஒரு முறுக்குஅதேபோல் வீரபாண்டி ஒன்றியம் இருசனாம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களின், 'தேடலின் பயணம்', 'நறுக்குன்னு ஒரு முறுக்கு' ஆகிய இரு கதைகள், முதல் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரத்தினவேல், பரிசுகள், சான்றிதழ் வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், இருசனாம்பட்டி தலைமை ஆசிரியர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
28-Mar-2025