உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருடிய மொபட்டுடன் வலம் சுற்றிவளைத்த உரிமையாளர்

திருடிய மொபட்டுடன் வலம் சுற்றிவளைத்த உரிமையாளர்

சேலம், ஓமலுார் அருகே மூங்கில்பாடி, சேனைகவுண்டனுார் காட்டுவளவை சேர்ந்தவர் மணிகண்டன், 34. இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, ரெட்டிப்பட்டி இன்ஜினியரிங் காலனியில் உள்ள மாமனார் வீட்டுக்கு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் வந்துள்ளார். மறுநாள் காலை, வீடு முன் நிறுத்திய மொபட்டை காணவில்லை. அவரது நண்பருடன் சேர்ந்து, மொபட்டை தேடினார். குரங்குச்சாவடியில் அவரது மொபட்டை, 21 வயது வாலிபர் ஓட்டிச்செல்வதை பார்த்து, கையும், களவுமாக பிடித்து, மொபட்டுடன் சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில் அந்த நபர், மாமாங்கத்தை சேர்ந்த பெரிய மோட்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் கண்ணன், 21, என்பதும், அவர் மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதனால் கண்ணனை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை