உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் கடித்து பெயின்டர் சாவு போலீசில் சகோதரி புகார்

நாய் கடித்து பெயின்டர் சாவு போலீசில் சகோதரி புகார்

சேலம், சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் ஹரிவிக்னேஷ், 23. பெயின்டரான இவருக்கு நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று காலை, அவரது உடல்நிலை மோசமாக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவரது அக்கா பிரகதி, அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், 'கடந்த ஆக., 28ல், தம்பியை தெரு நாய் கடித்தது. இதை, 3 நாட்களுக்கு பின் தான், அவர் என்னிடம் தெரிவித்தார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்' என கூறியிருந்தார். இதனால் ஹரி விக்னேஷ் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதன் அறிக்கை வந்த பின், இறப்புக்கு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி