உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வனத்துறை சார்பில் பனை விதை நடும் விழா

வனத்துறை சார்பில் பனை விதை நடும் விழா

ஆத்துார், கல்யாணகிரியில், வனத்துறை சார்பில் பனை விதைகள் நடும் விழா நடந்தது. ஆத்துார் அருகே, குமாரபாளையம் வனக்குழு எல்லைக்கு உட்பட்ட படையாச்சியூர், கல்யாணகிரி, ஏ.குமாரபாளையம் கிராமங்களில், வனத்துறை சார்பில், 'பனை விதைகள் நடும் திட்டம் -2025' திட்டத்தின் கீழ், பனை விதைகள் நடும் பணி நேற்று தொடங்கியது. கல்யாணகிரி பொன்னியம்மன் கோவில் அருகில் நடந்த விழாவுக்கு வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். வனக்குழுவினர், வனத்துறையினர், தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்று, பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை