உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

ஓமலுார், முறையாக குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.காடையாம்பட்டி தாலுகா, செம்மாண்டப்பட்டி அருகே, பாலிகாடு காலனி உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக, மேட்டூர் குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. கடந்த சில நாட்களாக, பராமரிப்பு பணிக்காக குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.இதே போல், கழிவறை கட்டடத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என கூறி நேற்று காலை, 8:30 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்கள், சின்ன திருப்பதி செல்லும் ரோட்டில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமலுார் போலீசார், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின், அவர்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ