மேலும் செய்திகள்
குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்
01-Sep-2025
ஆத்துார், ஆத்துார், 23வது வார்டு, கோரித்தெரு, அண்ணா தெருவில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு சீரான குடிநீர் வினியோகிப்பதில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள், நேற்று காலை, 9:00 மணிக்கு, உடையார்பாளையம் வழியே செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது மக்கள், 'தாமதமாக வினியோகிப்பதோடு, பல வீடுகளின் இணைப்புகளில் சீரான குடிநீர் வருவதில்லை. சில இணைப்புகளில் குடிநீர் வராததால் சிரமப்படுகின்றனர். நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை எடுத்துரைத்தும் நடவடிக்கை இல்லை' என்றனர். அதற்கு போலீசார், 'நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்து, சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். பின் மக்கள், காலை, 9:30 மணிக்கு கலைந்து சென்றனர்.
01-Sep-2025