உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுவாச்சூர் மக்கள் ஆர்.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் போராட்டம்

சிறுவாச்சூர் மக்கள் ஆர்.டி.ஓ., ஆபீஸ் வளாகத்தில் போராட்டம்

ஆத்துார், கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சிறுவாச்சூர் பகுதி மக்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிப்பிட வசதி, சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும். மேலும், மூப்பனார் கோவிலை சுற்றியுள்ள நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதனை அகற்றக் கூறியும் அப்பகுதியை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர்.அப்போது, மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் புகார் மனுவை, ஆர்.டி.ஓ.,விடம், கொடுக்க முடியாததால் ஆத்திரமடைந்த அவர்கள் அலுவலக நுழைவாயில் முன் அமர்ந்து, ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தாரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆத்துார் டவுன் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எழுந்து செல்லவில்லை. ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வரும்படி கூறிய பின், அவர்கள் மனு அளித்த பின் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ