உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நுாலகத்துக்கு போர்வெல் அமைக்க மக்கள் எதிர்ப்பு

நுாலகத்துக்கு போர்வெல் அமைக்க மக்கள் எதிர்ப்பு

ஏற்காடு: ஏற்காடு, லாங்கில்பேட்டையில் அரசுக்கு சொந்தமான துணை நுாலகம் உள்ளது. அதன் கட்டடம் சேதமடைந்துள்ளதால் விரைவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, நுாலகம் அருகே ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தொடங்கப்பட்டது. அதன் அருகே உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துதான், லாங்கில்பேட்டை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் கிணற்றில் தண்ணீர் வற்றி விடும் என்ற அச்சத்தில், ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என, அப்பகுதி மக்கள் இரவு, 11:30 மணிக்கு, ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தை சிறை பிடித்து, எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்காடு போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தி, ஆழ்துளை கிணறு போட வந்தவர்களிடம் பணியை நிறுத்தும்படி கூறினர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை