மேலும் செய்திகள்
மருமகளை சுட்ட மாமனாரை பிடிக்க தனிப்படை அமைப்பு
04-Jun-2025
வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்த, கல் உடைப்போர் நலச்சங்க தலைவர் முருகன். இவர் அரசு அனுமதி பெற்று, வாழப்பாடி, தேக்கல்பட்டியில் கல்குவாரி நடத்துகிறார். அங்கு விதிமீறி பெரிய அளவில் கற்களை, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, லாரியில் ஏற்றி, கடத்த முயன்றனர். மக்கள், லாரியை பிடித்து, வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வருவாய்த்துறையினர், லாரியை, கற்களுடன் வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, வாழப்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jun-2025