உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீரான குடிநீர் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

சீரான குடிநீர் கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் ;சேலம் மாநகராட்சி, 55வது வார்டில், தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெரு, 1 முதல், 7ம் தெரு, அம்பாள் ஏரி சாலை, மேட்டுத்தெரு, கருங்கல்பட்டி, இட்டேரி சாலை, குமரன் நகர், 1 முதல், 3 வரை உள்பட, 22 தெருக்களில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஆனால் மாநகராட்சி சார்பில், 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிப்பதால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், காலி குடங்களுடன் நேற்று, தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே உள்ள குடிநீர் தொட்டி முன் நின்று, 55வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமியுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அன்னதானப்பட்டி போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், பேச்சு நடத்தி, 'இனி முறையாக குடிநீர் வழங்கப்படும்' என தெரிவித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை