உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தானாக திறந்த ஆனைமடுவு மதகு வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிர்ச்சி

தானாக திறந்த ஆனைமடுவு மதகு வெள்ளப்பெருக்கால் மக்கள் அதிர்ச்சி

வாழப்பாடி: ஆனைமடுவு அணையின் தலைமை மதகு தானாக திறந்து தண்ணீர் வெளியேறி, வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்-டதால் கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில் தண்ணீர் தேங்கும்படி, ஆனைமடுவு அணை உள்-ளது. அங்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணை நிரம்பி இருந்தது. இந்நிலையில் மதியம், 1:30 மணிக்கு, அணையின் தலைமை மதகு வழியே அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அப்-பகுதி கரையோர மக்கள், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ஷட்டர் உடையும் நிலையில் உள்ளதாக தகவல் பரவியது. இதனால் கரையோர மக்கள், விவசாயிகள் இடையே அச்சம் ஏற்பட்டது.தொடர்ந்து இதுகுறித்து மக்கள், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தலைமை மதகின் ஷட்டர் தானாக திறந்து தண்ணீர் வெளியேறுவது தெரியவந்தது. இதைய-டுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், 1 மணி நேரத்தில், ஷட்டரை சீரமைத்து, மதகில் நீர் வெளியேறுவதை நிறுத்தினர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மதகின் ஷட்டர் உடையும் நிலையில் உள்ளதாக தவறான தகவல் பரப்பப்-பட்டுள்ளது. 'எலக்ட்ரிக் சர்க்யூட்' பழுதால், ஷட்டர் தானாக திறந்-துள்ளது. சிறிது நேரத்தில் சரிசெய்யப்பட்டது' என்றார்.மேலும் அணை நீர்மட்டம் மாலை, 4:00 மணி நிலவரப்படி, 67.03 அடி உயரத்தில், 264.63 மில்லியன் கன அடியாக குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை