மேலும் செய்திகள்
கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!
29-Jul-2025
வீரபாண்டி, வீரபாண்டி, எட்டிமாணிக்கம்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, 5 மினி தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது.ஆனால் ஓராண்டாக, தொட்டிக்கு வினியோகம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் தொட்டிக்கு குடிநீர் வினியோகிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து எட்டிமாணிக்கம்பட்டி ஊராட்சி செயலர் சரவணன் கூறுகையில், ''ஒரு தொட்டிக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மீதி தொட்டிகள் சேதம் அடைந்துள்ளன. ஒரு வாரத்தில் புது தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
29-Jul-2025