உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அத்திக்குட்டை சாலை இருளால் மக்கள் அவதி

அத்திக்குட்டை சாலை இருளால் மக்கள் அவதி

பனமரத்துப்பட்டி: மல்லுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து அத்திக்குட்டை வழியே பனமரத்துப்பட்டிக்கு சாலை செல்கிறது. அச்சாலையில் நுாலகம், தனியார் மருத்துவமனை, சாய்பாபா, சனிபகவான், பெருமாள் கோவில்கள் உள்ளன. ஒரு வாரமாக அத்திக்குட்டை சாலையில் உள்ள, 5 தெரு விளக்குகளும் எரியவில்லை. இரவில் கோவிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மொபைல் போன் வெளிச்சத்தில், மக்கள் நடந்து செல்கின்றனர். தெருவிளக்கை எரிய விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ