பெரியார் பல்கலை துணைவேந்தர் பணிக்காலம் நிறைவு
ஓமலுார்; சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தராக ஜெகநாதன், 2021 ஜூலை, 1ல் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது மூன்றாண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில், கவர்னர் ரவி, ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.இதன்படி, அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. பல்கலை நிர்வாகம் சார்பில், நேற்று மதியம் அவருக்கு பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை கண்டித்து, பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளையின்போது, கருப்பு கொடியுடன் பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பிரிவு உபசார விழாவில் பங்கேற்காமல் ஜெகநாதன் சென்றார்.