உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு; 2 இடங்களில் மக்கள் சாலை மறியல்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு; 2 இடங்களில் மக்கள் சாலை மறியல்

கெங்கவல்லி: கெங்கவல்லி, உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடத்துவதாக, விழா குழுவினர், மக்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். ஆனால் விழா ஏற்பாடுகளை சரிவர மேற்கொள்ளவில்லை என, போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று இரவு, 8:00 மணிக்கு, தம்மம்பட்டி - ராசிபுரம் மற்றும் ஆத்துார் - துறையூர் சாலை என, இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.இரவு, 9:00 மணிக்கு, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், பேச்சு நடத்தினர். அப்போது, 'போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணி சரிவர முடியவில்லை. முறையாக மேற்கொண்டால், விழா நடத்த பரிசீலிக்கப்படும்' என, போலீசார் கூறினர். பின் மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து உலிபுரத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை