உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேவூரில் இறைச்சி கடைகளுக்கு தனி கட்டடம் கட்டி தர மனு

தேவூரில் இறைச்சி கடைகளுக்கு தனி கட்டடம் கட்டி தர மனு

இடைப்பாடி, இறைச்சி கடைகளுக்கு, புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், தேவூர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலர் பெருமாள், தேவூர் பேரூராட்சி செயல் அலுவலர், தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தேவூரிலிருந்து காவேரிப்பட்டி செல்லும் சாலையில், ஞாயிறுதோறும் இறைச்சி கடைகள் அதிக அளவில் செயல்படுகின்றன. அப்போது போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுகிறது. எனவே, இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் வசதியுடன், புதிய கட்டடங்களை கட்டி தந்தால், பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை