உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பி.எப்., அலுவலக மாநில தடகளம் சேலம் மண்டல அணி சாம்பியன்

பி.எப்., அலுவலக மாநில தடகளம் சேலம் மண்டல அணி சாம்பியன்

ஓமலுார்:வருங்கால வைப்பு நிதி, சேலம் மண்டல அலுவலகம் சார்பில், மாநில அளவில் தடகள போட்டி, சேலம் பெரியார் பல்கலையில் நேற்று நடந்தது. தமிழகத்தில் உள்ள, 11 அலுவலகத்தில் பணிபுரியும், 129 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மண்டல கமிஷனர் ராகேஸ் சேகர் தொடங்கி வைத்தார்.அதில், 100, 200, 400, 1,500 மீ., உள்பட பல்வேறு ஓட்டப்போட்டிகள், நீளம், உயரம், தாண்டுதல், குண்டு, ஈட்டி, தட்டு எறிதல் போட்டிகள் நடந்தன. முடிவில், சேலம் மண்டல அலுவலக அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.வேலுார் மண்டல அணி, 2ம் இடம், தாம்பரம் அலுவலக அணி, 3ம் இடத்தை பிடித்தன. அந்த அணியினருக்கு, பெரியார் பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி, பரிசு வழங்கினார். சேலம் மண்டல கமிஷனர்கள்(அலகு 2) விக்னேஷ்வரன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் முதலிடம் பிடித்தவர்கள், இந்திய அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ