உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டல்:பரிசுடன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டல்:பரிசுடன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம்:சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் பெரிய வகை உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு துறையால், 1 லட்சம் ரூபாயுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ள சிறு வணிகர்களுக்கு, 50,000 ரூபாயுடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள வணிகர்கள், நவ., 25க்குள் விண்ணப்பிக்கலாம். உணவக உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒருவராவது உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மூன்றாம் தரப்பு ஆய்வில் குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.மாவட்ட அளவில் குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்படும். விபரங்களுக்கு, சேலம் நாட்டாண்மை கழக கட்டடத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறையை நேரிலோ, 0427 - 2450332 என்ற எண்ணிலோ அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !