உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாள் ஸ்டிரைக் தொடக்கம்

பொக்லைன் உரிமையாளர்கள் 3 நாள் ஸ்டிரைக் தொடக்கம்

மேட்டூர், டீசல், உதிரிபாகங்கள், புது வாகனங்கள் விலை உயர்வு, காப்பீடு, சாலைவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், மக்கள் பொக்லைன் பயன்பாட்டுக்கு வழங்கும் வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி, மேச்சேரி வட்டார பொக்லைன் உரிமையாளர்கள், நேற்று காலை முதல், வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.இதுகுறித்து பொக்லைன் உரிமையாளர் சுதாகர் கூறியதாவது:புது பொக்லைன் விலை தற்போது, 40 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. டிராக்டர் பணிக்கு ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபாய் வாடகை வழங்கப்படுகிறது. பொக்லைன் பணிக்கு தற்போது மக்கள் ஒரு மணி நேரத்துக்கு, 900 முதல், 1,000 ரூபாய் வாடகை வழங்குகின்றனர். அதை, 1,300 ரூபாயாகவும், 2 மணி நேரத்துக்கு, 2,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கக்கோரி, மே, 10(நேற்று) முதல், 12 வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.உரிமையாளர்கள், 40க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்களை, தொப்பூர் - பவானி நெடுஞ்சாலையோரம், எம்.காளிப்பட்டி அருகே வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி