உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ வைத்ததும் உடனே அணைத்து மாணவி சடலத்தை மீட்ட போலீஸ்

தீ வைத்ததும் உடனே அணைத்து மாணவி சடலத்தை மீட்ட போலீஸ்

மேட்டூர்: தர்மபுரி மாவட்டம் கம்மம்பட்டி, கஸ்துாரி தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் ஆலை ஊழியரான இவருக்கு, சேலம் மாவட்டம் மேச்சேரியில் வீடு உள்ளது. இவரது மகள் திவ்யகங்கா, 22. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.எஸ்சி., 2ம் ஆண்டு படித்தார்.நேற்று மதியம், அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதை யடுத்து சடலத்தை, சொந்த ஊரான கஸ்துாரி தோட்டத்துக்கு கொண்டு சென்று எரிக்க முயன்றனர். ஆனால் தொப்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைத்து மாணவி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து அங்கு சென்ற மேச்சேரி போலீசார், மாணவி சடலத்தை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் மாணவியின் மர்மச்சாவு குறித்து உறவினர்களிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !