உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹெல்மெட் அணிந்தோருக்கு சான்றிதழ் வழங்கிய போலீஸ்

ஹெல்மெட் அணிந்தோருக்கு சான்றிதழ் வழங்கிய போலீஸ்

சேலம்: சேலம் மாநகர தெற்கு போக்குவரத்து சார்பில், கலெக்டர் அலுவ-லகம் அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிட்டு தலைமை வகித்தார். அதில் அருகே உள்ள மேம்பாலத்தில், ஹெல்மெட் அணிந்து வந்தவர்-களை நிறுத்தி, பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.இதுகுறித்து கிட்டு கூறுகையில், ''உங்கள் மீது வழக்குப்போட விருப்பம் இல்லை. உங்களை காப்பாற்றுவதே, போலீசாரின் நோக்கம். போலீசார் உங்களுக்கு நண்பன்தான். விரோதி கிடை-யாது. தற்போது ஹெல்மெட் அணிந்து வந்த, 100 பேருக்கு சான்-றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல், வரும், 27 வரை சான்றிதழ் வழங்கப்படும்,'' என்றார்.சங்ககிரியில் வட்டார போக்குவரத்து கழகம் சார்பில், சாலை பாது-காப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். எபிநேசர் கால-னியில் ஊர்வலத்தை, ஆர்.டி.ஓ., லோகநாயகி தொடங்கி வைத்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் வழியே சென்ற ஊர்வலம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிந்தது. நெடுஞ்சா-லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுதா உள்ளிட்ட அதிகா-ரிகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஓமலுாரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் அலுவலர்கள், பணியா-ளர்கள், ஹெல்மெட் அணிந்து பைக் பேரணி நடத்தினர். உதவி கோட்ட பொறியாளர் கவிதா தலைமை வகித்தார். ஓமலுார் போக்-குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் வட்டார போக்குவரத்து துறை, அரசு மருத்-துவமனை, இந்திய மருத்துவ சங்கம், ஆத்துார் டவுன், ஊரக போலீசார் சார்பில், சாலை பாதுாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்-தது. சங்க நிர்வாகிகள், செவிலியர்கள், கல்லுாரி மாணவ, மாண-வியர், போக்குவரத்து துறையினர், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை ஓட்டிச்செல்லக்கோரி, விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சங்க மாநில தலைவர் செங்குட்டுவேல், தலைமை மருத்துவ அலுவலர் ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ