உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபர்களுடன் பழகிய மனைவி கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை

வாலிபர்களுடன் பழகிய மனைவி கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை

சேலம், சேலம், தாதகாப்பட்டி, 4வது கிராஸ், தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இரும்பு வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி ரதிதேவி, 28. அதே பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் களுக்கு, மகள், மகன் உள்ளனர்.ரதிதேவி வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்தார். இந்நிலையில் அவர், வேறு ஒரு வாலிபருடன் பழகி பேசுவதை அறிந்து கண்டித்துள்ளார். ஆனாலும் ரதிதேவி கண்டுகொள்ளவில்லை. இதனால் வீட்டில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், கத்தியால் ரதிதேவியை குத்தியுள்ளார். அவர் அலறல் சத்தம் கேட்டு, எதிரே வசிக்கும், ரதிதேவியின் அண்ணன் கதிரேசன், 30, ஓடி வந்து பார்த்தார். அப்போது ரதிதேவி ரத்தவெள்ளத்தில் மயங்கினார். அப்போது கண்ணன், 'அருகே வந்தால் உன்னையும் குத்திவிடுவேன்' என கூறி மிரட்டி, அங்கிருந்து தப்பினார்.பின் ரதிதேவியை, கதிரேசன், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. அன்னதானப்பட்டி போலீசார், கண்ணனை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை